ADDED : ஜூன் 12, 2024 01:47 AM
குள்ளஞ்சாவடி : பொது இடத்தில் மது அருந்திய இருவரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, கோ.சத்திரம் கிராஸ் ரோடு அருகே ரோந்து சென்றனர்.
அங்குள்ள பேருந்து நிறுத்தம் உள்ள பகுதியில் இரண்டு நபர்கள் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தினர்.
தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் பொது இடத்தில் மது அருந்திய கோ.சத்திரம் பகுதியை சேர்ந்த, மணிகண்டன், 39, நடுக்குப்பம் பகுதியை சேர்ந்த, சாமிதுரை, 37, ஆகிய இருவரை கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிந்தனர்.