கதண்டு கடித்து 18 பேருக்கு சிகிச்சை
கதண்டு கடித்து 18 பேருக்கு சிகிச்சை
கதண்டு கடித்து 18 பேருக்கு சிகிச்சை
ADDED : ஜூன் 20, 2024 09:01 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரை மணிமுக்தாற்று பாலத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு கடித்து, 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருத்தாசலம் பாலக்கரை மணிமுக்தாற்று பாலத்தின் கீழ், கதண்டு கூடு கட்டியிருந்தது. நேற்று மாலை 6:00 மணியளவில் அவ்வழியாக சென்ற பொதுமக்களை பாலத்தின் கீழ் இருந்த கதண்டுகள் பறந்து வந்து கடித்தது.
இதில், வழக்கறிஞர் சாமிநாதன், அரசு பள்ளி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 பேரை கதண்டு கடித்தது. உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நிறைந்த பாலக்கரை பாலத்தில் சென்ற பொதுமக்களை கதண்டு கடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.