/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கலைஞரின் கனவு இல்லத் திட்டம் விருதையில் 130 வீடுகளுக்கு அனுமதி கலைஞரின் கனவு இல்லத் திட்டம் விருதையில் 130 வீடுகளுக்கு அனுமதி
கலைஞரின் கனவு இல்லத் திட்டம் விருதையில் 130 வீடுகளுக்கு அனுமதி
கலைஞரின் கனவு இல்லத் திட்டம் விருதையில் 130 வீடுகளுக்கு அனுமதி
கலைஞரின் கனவு இல்லத் திட்டம் விருதையில் 130 வீடுகளுக்கு அனுமதி
ADDED : ஜூலை 04, 2024 11:46 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், வீடு கட்டும் பணியை ஒன்றிய சேர்மன் மலர் முருகன் துவக்கி வைத்தார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், ஒரு லட்சம் வீடுகள் நடப்பாண்டில் கட்டித் தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில், 35 கிராமங்களில் முதற்கட்டமாக 130 வீடுகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஒரு பயனாளிக்கு தலா 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டப்பட உள்ளன.
அதன்படி, குப்பநத்தம், கருவேப்பிலங்குறிச்சி, வேட்டக்குடி உள்ளிட்ட கிராமங்களில் வீடு கட்டும் பணிகள் நேற்று முன்தினம் துவங்கின. வேட்டக்குடி ஊராட்சியில் நடந்த நிகழ்சிக்கு, ஒன்றிய சேர்மன் மலர் முருகன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் முன்னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர் கலைச்செல்வி கோவிந்தசாமி வரவேற்றார்.
அப்போது, வீடு கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, உரிய காலத்தில், அனுமதித்த அளவில் தரமாக கட்டி முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பி.டி.ஓ., சீனிவாசன், உதவி பொறியாளர் ருக்மணி, மேற்பார்வையாளர் கோபால், துணை பி.டி.ஓ., செல்வகுமாரி உட்பட பலர் உடனிருந்தனர்.