/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.1.17 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தி.மு.க., கவுன்சிலர் தளபதி தகவல் ரூ.1.17 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தி.மு.க., கவுன்சிலர் தளபதி தகவல்
ரூ.1.17 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தி.மு.க., கவுன்சிலர் தளபதி தகவல்
ரூ.1.17 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தி.மு.க., கவுன்சிலர் தளபதி தகவல்
ரூ.1.17 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தி.மு.க., கவுன்சிலர் தளபதி தகவல்
ADDED : ஜூன் 08, 2024 05:49 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி 7வது வார்டில் 1.17 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகளை செய்து முடித்துள்ளேன் என தி.மு.க., கவுன்சிலர் தளபதி தெரிவித்தார்.
அவரது பேட்டி:
எனது வார்டில் அண்ணா நகரில் 9.95 லட்சம் ரூபாயில் போர்வெல் போட்டு, நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தடையின்றி குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளேன்.
அண்ணா நகர் முதல் தெருவில் (ஓ.எச்.டி., தெரு) வடிகால் வசதியுடன் 15 லட்சத்தில் தார் சாலை, அன்பு நகரில் 3 தெருக்களுக்கு 10 லட்சத்தில் தார் சாலை போடப்பட்டுள்ளது.
சங்கத்தமிழ் தெரு, மேட்டுத்தெருவில் தலா 5 லட்சத்தில் தார் சாலை, பூங்குன்றனார் தெருவில் 20 லட்சத்தில் சிமென்ட் சாலை, திருவள்ளுவர் தெருவில் வடிகால் வசதியுடன் 9.95 லட்சத்தில் சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது.
அண்ணா நகர் சன்னதி தெரு, கோவில் தெரு, புகழேந்தி தெருவுக்கு தலா 7 லட்சத்தில் சிமென்ட் சாலை, கபிலர் தெரு, கம்பர் தெரு, ரோஜாப்பூ தெருக்களுக்கு 20 லட்சத்தில் தார் சாலை போடப்பட்டுள்ளது.
அமராவதி தெருவில் 9.95 லட்சத்தில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் கிழக்கு பகுதி, அமராவதி நகர், ரோஜாப்பூ தெரு, சின்னப்பூ தெரு மக்களுக்கு 3 லட்சம் ரூபாயில் 3 அங்குல பைப்லைன் போடப்பட்டுள்ளது.
அண்ணா நகர் ஏ.பி., நகரில், 47 லட்சம் ரூபாயில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட ஒப்புதல் பெற்றுள்ளேன். வாட்டர் டேங்க் தெரு, முத்தமிழ் தெரு, சேக்கிழார் தெருக்களுக்கு புதிதாக சிமென்ட் சாலை அமைத்து தரப்படும்.
அவ்வை தெருவில் வடிகால் வசதி, அண்ணா நகரில் 7 தெருக்களுக்கு 2 கி.மீ., தொலைவிற்கு வடிகால், சங்கத்தமிழ் தெருவில் 9.95 லட்சத்தில் போர்வெல், அண்ணா நகர் வடக்கு பகுதியில் வடிகால், இளங்கோவடிகள் தெருவுக்கு சிமென்ட் சாலை போடப்பட உள்ளது.
அமைச்சர் கணேசன், நகர்மன்ற சேர்மன் சங்கவி முருகதாஸ், துணை சேர்மன் ராணி தண்டபாணி ஆகியோரது ஒத்துழைப்புடன் நலப்பணிகளை நிறைவேற்றி வருகிறேன்' என்றார்.