Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 

குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 

குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 

குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 

ADDED : ஜூலை 14, 2024 03:38 PM


Google News
விருத்தாசலம்:

முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.

விருத்தசலம் அடுத்த கோ.ஆதனுார் கிராமத்தில் ஆயிரத்ததிற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்களுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்த கிராமத்தில் உள்ள தனிநபர் சிலர், தண்ணீரை விரயம் செய்வதால், வடக்கு தெரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, கடந்த ஒரு மாதங்களுக்கு மேல் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால், அப்பகுதி மக்கள் வெகுதுாரம் சென்று தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை.

இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 11:15 மணியளவில், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கம்மாபுரம் போலீசார் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், காலை 11:45 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us