/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திரவுபதியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா திரவுபதியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
திரவுபதியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
திரவுபதியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
திரவுபதியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
ADDED : ஜூலை 28, 2024 04:06 AM
புவனகிரி, : புவனகிரி அடுத்த தம்பிக்குநல்லாம்பட்டினம் திரவுபதியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டலாபிேஷகம் நடந்து வந்தது. நேற்று மண்டலாபிேஷகம் பூர்த்தி விழா நடந்தது. அதையொட்டி, பகல் 12.00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகளும் மண்டல பூர்த்தி விழாவும் நடந்தது. ஊராட்சி தலைவர் ஜோதிநாகலிங்கம் உள்ளிட்ட அப்பகுதியினர் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.