ADDED : செப் 23, 2025 11:10 PM
கோவை; இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல அளவிலான பள்ளி, மாணவ, மாணவியருக்கு (14, 17, 19 வயதுக்கு உட்பட்ட), 28, 29ம் தேதிகளில் தேர்வு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அரசூரில் உள்ள கே.பி.ஆர். இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வாலிபால், பேட்மின்டன், டென்னிஸ் போட்டிகளுக்கு தேர்வு நடக்கிறது. மாணவியருக்கு 28ம் தேதியும், மறுநாள் 29ம் தேதி மாணவர்களுக்கும் காலை 7 முதல் இந்த மூன்று போட்டிகள் நடக்கின்றன.
தேர்வு போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொள்ளும் விதமாக, நான்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளி கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.