/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பேட்டரி திருடிய வாலிபர்களுக்கு தர்ம அடி பேட்டரி திருடிய வாலிபர்களுக்கு தர்ம அடி
பேட்டரி திருடிய வாலிபர்களுக்கு தர்ம அடி
பேட்டரி திருடிய வாலிபர்களுக்கு தர்ம அடி
பேட்டரி திருடிய வாலிபர்களுக்கு தர்ம அடி
ADDED : செப் 16, 2025 07:41 AM
கோவை; சரவணம்பட்டியில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் வாகனங்களில் பேட்டரி திருடிய இருவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
சரவணம்பட்டி, காந்திமா நகர் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு, இரு வாலிபர்கள், வாகனங்களில் பேட்டரி திருடிக் கொண்டிருந்தனர். இதனை கண்ட பொதுமக்கள், அவ்விருவரையும் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த சரவணம்பட்டி போலீசார், இருவரையும் மீட்டு விசாரணை செய்ததில், சிங்காநல்லுாரைச் சேர்ந்த பாலு, 36, புளியகுளத்தை சேர்ந்த ரவி,35 என்பது தெரியவந்தது.