/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இருசக்கர வாகனங்கள் மோதலில் வாலிபர் பலி இருசக்கர வாகனங்கள் மோதலில் வாலிபர் பலி
இருசக்கர வாகனங்கள் மோதலில் வாலிபர் பலி
இருசக்கர வாகனங்கள் மோதலில் வாலிபர் பலி
இருசக்கர வாகனங்கள் மோதலில் வாலிபர் பலி
ADDED : ஜூன் 20, 2025 06:31 AM
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி அருகே, இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே, ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த தண்டபாணியின் மகன் சரவணன்,26. இவர், பொள்ளாச்சியில் இருந்து, நேற்று மதியம் ஊருக்கு பைக்கில் சென்றார். அப்போது, கோவைரோடு, தில்லை நகர் அருகே, கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னாள் சென்ற மொபட் மீது மோதியது. விபத்தில், தடுமாறி விழுந்த சரவணன் அங்கு நின்று கொண்டு இருந்த லாரியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மொபட்டில் சென்ற பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த ரியாஸ்அகமது,50, படுகாயம் அடைந்தார். நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடி, வீடு திரும்பிய சரவணன் விபத்தில் இறந்தது, குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.