ADDED : ஜன 12, 2024 08:58 PM
மேட்டுப்பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம், 23. இவரது நண்பர் தீபக். காரமடை கண்ணார்பாளையத்தில் இருந்து பெள்ளாதி சாலையில் தீபக் பைக்கை ஓட்ட, ஸ்ரீராம் பின்னால் அமர்ந்து சென்றார்.
பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஸ்ரீராமை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். தீபக் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இதுகுறித்து காரமடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.---