ADDED : செப் 09, 2025 10:46 PM
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கு.வடமதுரை கோட்டத்துக்கு உட்பட்ட, குரும்பபாளையம் பிரிவு அலுவலகம், குரும்பபாளையம் பகிர்மான பகுதியில் தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளவில்லை.
குரும்பபாளையம், வையாபுரி நகர், வில்லேஜ் நகர், ஜெயந்தி கார்டன், இ.பி.காலனி, குமரன் நகர், பத்மாவதி நகர், காளப்பட்டி ரோடு, கோவில்பாளையம் பாலாஜி நகர் மற்றும் தேவபாளையம் பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், ஜூலை மாத மின் கட்டணத்தையே செப்., மாதத்துக்கும் செலுத்தலாம் என, கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.