/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பெண்களுக்கு எதிரான சித்ரவதை உள்ளக குழுவில் புகார் அளிக்கலாம்' 'பெண்களுக்கு எதிரான சித்ரவதை உள்ளக குழுவில் புகார் அளிக்கலாம்'
'பெண்களுக்கு எதிரான சித்ரவதை உள்ளக குழுவில் புகார் அளிக்கலாம்'
'பெண்களுக்கு எதிரான சித்ரவதை உள்ளக குழுவில் புகார் அளிக்கலாம்'
'பெண்களுக்கு எதிரான சித்ரவதை உள்ளக குழுவில் புகார் அளிக்கலாம்'
ADDED : ஜூன் 27, 2025 11:31 PM
கோவை; பெண்களுக்கு எதிரான சித்ரவதை தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று,கருத்தரங்கில் நீதிபதி பேசினார்.
கோவை வக்கீல் சங்கம், மனித உரிமை பிரிவு சார்பில், சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள சங்க அரங்கில் கருத்தரங்கம் நடந்தது.
வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் வக்கீல் வி.பி.சாரதி முன்னிலை வகித்தார்.
இதில், கோவை முதன்மை லேபர் கோர்ட் நீதிபதி லதா பேசியதாவது:
பெண்களுக்கு எதிரான சித்ரவதை தடுப்பதற்கு, 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் இடங்களில் உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவை நீதிமன்ற வளாகத்திலும் இக்குழு செயல்படுகிறது.
பெண்களுக்கு எதிரான சித்ரவதை எதுவாக இருந்தாலும் இக்குழுவில் புகார் அளிக்கலாம்.
புகார் அளிப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். புகார் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல, மாவட்ட அளவில், முறை சாரா தொழிலாளர்களுக்காக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் குழு தனியாக உள்ளது. இங்கும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு,நீதிபதி லதா பேசினார்.
அதை தொடர்ந்து, சித்ரவதையால் பாதிக்கப்பட்டோர் விழிப்புணர்வு பிரசார வீடியோவை, எஸ்.சி.,எஸ்.டி., கோர்ட் நீதிபதி விவேகானந்தன் துவக்கிவைத்தார்.