/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'அக்னிவீர்' திட்டத்தில் சேர்வதற்கு மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்'அக்னிவீர்' திட்டத்தில் சேர்வதற்கு மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்
'அக்னிவீர்' திட்டத்தில் சேர்வதற்கு மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்
'அக்னிவீர்' திட்டத்தில் சேர்வதற்கு மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்
'அக்னிவீர்' திட்டத்தில் சேர்வதற்கு மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 24, 2024 12:09 AM
கோவை;கோவையில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் சார்பில், அக்னிபாத் திட்டத்தின் கீழ், 2024-25ம் ஆண்டுக்கான 'அக்னிவீர்' சேர்க்கை நடத்தப்படுகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், மதுரை, தேனி, தர்மபுரி ஆகிய, 11 மாவட்டங்களை சேர்ந்த, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து, ஆன்லைன் முறையில், விண்ணப்பம் பெறப்படுகிறது.
வரும் மார்ச், 22 வரை விண்ணப்பம் அனுப்பலாம்; ஏப்., 22 முதல் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படும். இரு கட்டமாக அக்னிவீர் திட்டத்தில் ஆட்கள் சேர்க்கப்படுவர். முதல் கட்டத்தில், ஆன்லைன் கம்ப்யூட்டர் அடிப்படையில், எழுத்துத்தேர்வு நடத்தப்படும்.
இந்திய ராணுவத்தில் தகுதி அடிப்படையில், வெளிப்படையாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ராணுவத் தேர்வு மற்றும் ஆட்சேர்ப்புக்கு, எந்த வகையிலும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை.
ஆட்சேர்ப்பு முகவர்களாக காட்டிக் கொள்ளும், நேர்மையற்ற நபர்களை விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.