ADDED : ஜன 06, 2024 12:49 AM

கோவை;கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் இளம் தொழில் முனைவோர் அமைப்பான (யெஸ்) சார்பில், 'யெஸ்கான்' எனும் இரண்டு நாள் இளம் தொழில் முனைவோருக்கான மாநாடு, நேற்று துவங்கியது.
மாநாட்டில் 100 ஸ்டால்களில், பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தொழில் முனைவோரின் உணர்வை கொண்டாடும் விதமாக, வேறு வேறு நகரங்களில் நடத்தப்படுகின்றன. இம்மாநாடு, 'மிகுதியாய் உணர்' என்ற பொருளில் நடக்கிறது.
மாநாட்டு கண்காட்சியை, கொடிசியா தலைவர் திருஞானம் துவக்கி வைத்தார். யெஸ் அமைப்பின் தலைவர் நீதிமோகன், முத்துக்குமார் ஒருங்கிணைப்பாளர் தீபக் ராஜ்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.