ADDED : ஜூலை 04, 2025 10:14 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், லயன்ஸ் கிளப் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், லயன்ஸ் கிளப் சார்பில், ஆண்டு முழுவதும் மதியம், 12:00 மணிக்கு, 127 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார். பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் சங்க செயலாளர் விஜயகுமார், சங்க தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம், முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.