Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சர்வதேச படகு போட்டியில் பங்கேற்க தயார் நிலையில் 'யாழி'

சர்வதேச படகு போட்டியில் பங்கேற்க தயார் நிலையில் 'யாழி'

சர்வதேச படகு போட்டியில் பங்கேற்க தயார் நிலையில் 'யாழி'

சர்வதேச படகு போட்டியில் பங்கேற்க தயார் நிலையில் 'யாழி'

ADDED : ஜூன் 05, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
கோவை; சர்வதேச அளவில் மொனாக்காவில் நடக்கும், எனர்ஜி படகு சவால் போட்டியில் இந்தியா சார்பில், கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி பங்கேற்கவுள்ளது.

சர்வதேச அளவில் 44 அணிகள் பங்கேற்கின்றன. பசுமை கடல் தொழில்நுட்பத்தில் புதுமைகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வு, ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக பரிசுகளை வென்று வரும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, இந்த ஆண்டும் பங்கேற்கிறது.

போட்டியில் பங்கேற்பதற்கான ஆயத்த துவக்க விழா, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்திய கடற்படையின் சுயசார்பு மற்றும் இந்திய மயமாக்கல் மையத்தின் இயக்குனர் கமாண்டர் பாலசுந்தரம், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி உருவாக்கியுள்ள, 'யாழி' என்ற இந்த படகு, பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது. ஹைட்ரஜன் உதவியுடன் இயங்கும், முதல் படகு என்ற பெருமையை பெற்றுள்ளது, என்றார்.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளர் சங்கர் வாணவராயர், முதல்வர் எழிலரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us