/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாசி மாத பவுர்ணமி கோவிலில் வழிபாடுமாசி மாத பவுர்ணமி கோவிலில் வழிபாடு
மாசி மாத பவுர்ணமி கோவிலில் வழிபாடு
மாசி மாத பவுர்ணமி கோவிலில் வழிபாடு
மாசி மாத பவுர்ணமி கோவிலில் வழிபாடு
ADDED : பிப் 23, 2024 11:32 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி ஜோதிநகர் கோவிலில், மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷம், அமாவாசை, முக்கிய நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.