/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோடங்கிப்பட்டி பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் கோடங்கிப்பட்டி பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம்
கோடங்கிப்பட்டி பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம்
கோடங்கிப்பட்டி பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம்
கோடங்கிப்பட்டி பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம்
ADDED : மார் 23, 2025 09:52 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது.சிட்டுக்குருவிகளின் அவசியம், முக்கியத்துவம், மனிதர்களுக்கு அவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், காலநிலை மாற்றங்கள், மனிதர்களின் வாழ்வியல் மாற்றங்கள், அபரிவிதமான அறிவியல் தொழில்நுட்பங்கள் காரணமாக அவைகளின் வாழ்க்கை சுழற்சி மாற்றங்கள், உணவு தானியங்கள், வாழிடங்கள் பற்றாக்குறை, பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.வாழ்விடங்களை பாதுகாக்கவும், மரங்களை நடவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கோடை காலங்களில், பறவைகளுக்கு தண்ணீர், உணவு தானியங்கள் வழங்க வலியுறுத்தப்பட்டன. சிட்டுக்குருவிகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் தினகரன், ஆசிரியர் சத்தியா ஆகியோர் செய்திருந்தனர்.