Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஐ.எப்.ஜி.டி.பி.,யில் உலக பல்லுயிர் தினம்

ஐ.எப்.ஜி.டி.பி.,யில் உலக பல்லுயிர் தினம்

ஐ.எப்.ஜி.டி.பி.,யில் உலக பல்லுயிர் தினம்

ஐ.எப்.ஜி.டி.பி.,யில் உலக பல்லுயிர் தினம்

ADDED : மே 23, 2025 11:53 PM


Google News
கோவை : கோவை, இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு மையத்தில் (ஐ.எப்.ஜி.டி.பி.,) உலக பல்லுயிர் தினம் கொண்டாடப்பட்டது.

சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில், கோவை அரசு கல்வியியல் கல்லூரி மாணவியர் பங்கேற்றனர்.

பல்லுயிர்ச்சூழலின் முக்கியத்துவத்தை, எதிர்கால ஆசிரியர்களுக்கு எடுத்துரைப்பதன் வாயிலாக, அடுத்தடுத்த தலைமுறைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதே, இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பிரசார வாசகம் உருவாக்கும் போட்டி நடந்தது. சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மைய திட்ட அலுவலர் விக்னேஷ்வரன், 'இயற்கையுடன் இயைந்து வாழ்தல் மற்றும் நிலையான வளர்ச்சி' என்ற தலைப்பில் பேசினார்.

நிகழ்ச்சியில், ஐ.எப்.ஜி.டி.பி., அதிகாரிகள், வனத்துறையினர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us