/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மலைவாழ் மக்களின் சுயதொழிலுக்காக சீங்கப்பதி கிராமத்தில் தொழிற்கூடம்மலைவாழ் மக்களின் சுயதொழிலுக்காக சீங்கப்பதி கிராமத்தில் தொழிற்கூடம்
மலைவாழ் மக்களின் சுயதொழிலுக்காக சீங்கப்பதி கிராமத்தில் தொழிற்கூடம்
மலைவாழ் மக்களின் சுயதொழிலுக்காக சீங்கப்பதி கிராமத்தில் தொழிற்கூடம்
மலைவாழ் மக்களின் சுயதொழிலுக்காக சீங்கப்பதி கிராமத்தில் தொழிற்கூடம்
ADDED : ஜன 01, 2024 12:28 AM

தொண்டாமுத்தூர்:சீங்கப்பதி மலை கிராமத்தில், மலைவாழ் மக்களுக்கு, சுய தொழிலுக்கான தொழிற்கூடம் கட்டப்பட்டு வருகிறது.
மத்வராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட சீங்கப்பதி மலை கிராமத்தில், சுமார், 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்குமுன், தனியார் கல்லூரி சார்பில், உண்ணி குச்சியை கொண்டு, கூடை, டேபிள், சேர் போன்ற பொருட்கள் தயாரிக்க, பயிற்சி அளிக்கப்பட்டது. அதனையடுத்து, மலைவாழ் மக்களுக்கும், இதனை சுய தொழிலாக செய்து வந்தனர்.
அதன்பின், பொருட்களை சரிவர விற்பனை செய்யமுடியவில்லை என்பதால், இத்தொழிலை கைவிட்டனர்.
இந்நிலையில், சீங்கப்பதியில் ஏற்கனவே, இருந்த பழைய தொழிற்கூடம் சேதமடைந்திருந்ததால், மத்வராயபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், மலைவாழ் மக்களுக்கான புதிய தொழிற்கூடம் கட்டும் பணி, படுஜோராக நடந்து வருகிறது.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'சீங்கப்பதி மலை கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.11 லட்சம் மதிப்பில், புதிய தொழிற்கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
கட்டடப்பணிகள் நிறைவடைந்ததும், தேவையான இயந்திரங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு, மலைவாழ் மக்கள், உண்ணி குச்சியை வேகவைத்து, இயந்திரத்தின் உதவியுடன், சேர், டேபிள் போன்ற பொருட்கள் தயாரிக்க உள்ளனர். அப்பொருட்களை, பூம்புகார் விற்பனை நிலையத்தில் வைத்து விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அளித்துள்ளோம்,என்றனர்.