/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு கோவையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு கோவையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு கோவையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு கோவையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு கோவையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2024 12:51 AM

கோவை;ரேஷன் கடைகளுக்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி, கோவையில் ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் ராமு முன்னிலை வகித்தார்,
அதில், மாநில தலைவர் ராஜேந்திரன் பேசியதாவது:
ரேஷன் கடை பணியாளர்களுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். அனைத்து கடைகளிலும் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தும்போது, ஒரு கார்டுக்கு ஐந்து ரூபாய் வழங்க வேண்டும்.
விடுமுறை நாட்களில், நகர்வு பணி மேற்கொள்ளக் கூடாது. அனைத்து அரசு விடுமுறை நாட்களும் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தகுதியானவர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைமை நிலைய செயலாளர் ராதிகா, தகவல் தொடர்பு பிரிவு மைதிலி உட்பட பலர் பங்கேற்றனர். மாநில மகளிரணி தலைவர் வசந்தி நன்றி கூறினார்.