/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனியார் நிதி நிறுவனம் மீது தொழிலாளி புகார் மனு தனியார் நிதி நிறுவனம் மீது தொழிலாளி புகார் மனு
தனியார் நிதி நிறுவனம் மீது தொழிலாளி புகார் மனு
தனியார் நிதி நிறுவனம் மீது தொழிலாளி புகார் மனு
தனியார் நிதி நிறுவனம் மீது தொழிலாளி புகார் மனு
ADDED : ஜூன் 29, 2025 11:31 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, தொழிலாளி வீட்டில் 'நோட்டீஸ்' ஒட்டி மிரட்டல் விடுத்ததாக, தனியார் நிதி நிறுவனம் மீது, சப் - கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, கஞ்சம்பட்டி அம்மேகவுண்டனுாரை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி வேலுமணி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், தனியார் நிதி நிறுவனத்தில், 5.20 லட்சம் ரூபாய் வீட்டு கடன் பெற்றேன். தற்போது, இரண்டு லட்சம் ரூபாய் வரை தவணை தொகை செலுத்தி உள்ளேன். இதற்கிடையே இருதய நோய் ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.
இந்நிலையில், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள், வீட்டில் 'நோட்டீஸ்' ஒட்டினர். இது குறித்து கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்தனர்.
தமிழக அரசு, ஏழைகளிடம் வீட்டு கடன் சம்பந்தமாக ஜப்தி நோட்டீஸ் ஒட்டவோ, அபராத தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்யவோ கூடாது என தெரிவித்துள்ளது. எனவே, நிதிநிறுவன ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.