ADDED : மே 24, 2025 06:32 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சொக்கனூரில் உள்ள, 'செல்கான் பிரிக்காஸ்ட்' என்ற தனியார் கம்பெனியில், ஈரோட்டை சேர்ந்த ஜெயசீலன், 34, என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சிவகங்கையை சேர்ந்த முத்துமணி, கிரேனை அஜக்கராரதையாக இயக்கியதில் ஜெயசீலன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயசீலன், சிகிச்சை பலனின்றி இறந்தார். கிணத்துக்கடவு போலீசார், கிரேன் ஆப்ரேட்டர் முத்துமணியை கைது செய்தனர்.