ADDED : ஜூன் 08, 2025 10:30 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே பாத்திர வியாபாரியை தாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன், 26, பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவர், இவரது தம்பி சந்துரு மற்றும் சிறுமுகை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான பரமசிவம், 23, ஆகியோர் ஒன்றாக மது அருந்தினர். அப்போது மோகன் மற்றும் பரமசிவம் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த பரமசிவம் தன் கையில் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து மோகனின் தோள்பட்டையில் தாக்கினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக மோகன் அளித்த புகாரின் பேரில் பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர்.--