/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தாலுகா அலுவலகத்தில் பணிகள் பாதிப்புதாலுகா அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு
தாலுகா அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு
தாலுகா அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு
தாலுகா அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு
ADDED : பிப் 23, 2024 10:59 PM
அன்னுார்:அன்னுார் தாலுகா அலுவலகத்தில், இரண்டாவது நாளாக நேற்றும் பணிகள் பாதிக்கப்பட்டன.
வருவாய்த் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கு தனி வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
2024 தேர்தல் பணிக்கு முழுமையான நிதி ஒதுக்க வேண்டும் என்பன, உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், பிப்., 22 முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தது.
நேற்று முன்தினம் அன்னுார் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் 43 ஊழியர்களில், 15 பேர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக நேற்றும் 15 பேர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு சான்றுகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் அன்னூர் தாலுகா அலுவலகம் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பணி புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என, வருவாய் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.