/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கவுண்டம்பாளையத்தில்குதிரை கடித்து பெண் காயம் கவுண்டம்பாளையத்தில்குதிரை கடித்து பெண் காயம்
கவுண்டம்பாளையத்தில்குதிரை கடித்து பெண் காயம்
கவுண்டம்பாளையத்தில்குதிரை கடித்து பெண் காயம்
கவுண்டம்பாளையத்தில்குதிரை கடித்து பெண் காயம்
ADDED : ஜூன் 22, 2025 11:24 PM
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையத்தில் ரோட்டில் நடமாடும் குதிரை ஒன்று பெண்ணை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், டி.வி.எஸ்., நகர், கணுவாய், அப்ப நாயக்கன்பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குதிரைகளின் உரிமையாளர்கள், அதை பராமரிக்காமல் சாலைகளில் அவிழ்த்து விட்டு விடுவதால், அவை ரோட்டில் செல்வோருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், இடையர்பாளையம், நேரு நகரை சேர்ந்த விஜயலட்சுமி,46, இவர் கவுண்டம்பாளையம் அருகே ரோட்டில் நடந்து சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த குதிரை ஒன்று விஜயலட்சுமியை கடித்தது. இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கோவை மாநகராட்சி நிர்வாகம், குதிரைகளின் உரிமையாளர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.