/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அனுவாவி சுப்ரமணியர் கோவில் பாதையில் ஓநாய்கள் நடமாட்டம்அனுவாவி சுப்ரமணியர் கோவில் பாதையில் ஓநாய்கள் நடமாட்டம்
அனுவாவி சுப்ரமணியர் கோவில் பாதையில் ஓநாய்கள் நடமாட்டம்
அனுவாவி சுப்ரமணியர் கோவில் பாதையில் ஓநாய்கள் நடமாட்டம்
அனுவாவி சுப்ரமணியர் கோவில் பாதையில் ஓநாய்கள் நடமாட்டம்
ADDED : ஜன 28, 2024 11:26 PM

பெ.நா.பாளையம்:கோவை-ஆனைகட்டி ரோடு அனுவாவி சுப்ரமணியர் சுவாமி கோவில் பாதையில், ஓநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில் வனவிலங்குகளில் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலைப்பகுதியில் உள்ள குளம், குட்டை, சிற்றோடைகளில் தண்ணீர் வரத்து வேகமாக குறைந்து வருகிறது.
இதனால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் மலையோர கிராமங்களுக்கு வருகிறது. பெரியதடாகம் மலை மீது அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது.
இம்மலையை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை, 5.00 மணிக்கு மேல் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், கோவில் படிக்கட்டு பாதையில் ஓநாய்கள் கூட்டம், கூட்டமாக நடந்து செல்லும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ''இங்கு ஓநாய்கள் கூட்டம், கூட்டமாக நடமாடுவதால், பக்தர்கள் தனியாக செல்லாமல், கூட்டமாக செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். மாலை நேரங்களில், அனுவாவி சுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு செல்வதை தவிர்த்தல் நல்லது,'' என்றனர்.