/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பூங்கா வருமா? அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பூங்கா வருமா?
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பூங்கா வருமா?
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பூங்கா வருமா?
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பூங்கா வருமா?
ADDED : ஜூன் 11, 2025 09:47 PM
கோவை; கோவை அரசு மருத்துவமனையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையம் செயல்பட்டு வருகிறது. இதில், உள்நோயாளிகளாக சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, பூங்கா வசதி ஏற்படுத்தி தர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இம்மருத்துவமனையில், பல்வேறு மாவட்டங்கள், கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நோயாளிகள் தினந்தோறும் வருகின்றனர். குறிப்பாக, குழந்தைகள் பலர் இங்கு பரிந்துரையின் பேரில் சேர்க்கப்படுகின்றனர். புற்றுநோய், இதய பாதிப்பு, ஆட்டிசம் போன்ற குறைபாடுகள், சர்க்கரை பாதிப்பு என, பல்வேறு பிரிவுகளில் சேர்க்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு புதிதாக, 70 குழந்தைகள் உள்நோயாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். இதில், தீவிர சிகிச்சை பிரிவு தவிர, பிற குழந்தைகள் சிகிச்சை எடுத்தாலும் ஓடி, ஆடி விளையாடும் திறன் மிக்கவர்கள்.
இக்குழந்தைகளுக்கு பூங்கா வசதி அமைத்து கொடுக்க பெற்றோர் விரும்புகின்றனர். தற்சமயம், பெற்றோர் பலர் வேறு வழியின்றி, நாள் முழுவதும் மொபைல் போன் கொடுத்து கட்டுப்படுத்துகின்றனர்.
மருத்துவமனை நிர்வாக தரப்பில், பூங்காவிற்காக 3000-4000 சதுர அடி இடப்பரப்பு இருப்பதாகவும், கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகம் தயாராக இருந்தாலும், நிதி கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதாக தெரிகிறது. இதனால் தன்னார்வலர்கள் கரம் கோர்த்து, பார்க் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.