/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுந்தராபுரம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் கைகொடுக்குமா? சுந்தராபுரம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் கைகொடுக்குமா?
சுந்தராபுரம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் கைகொடுக்குமா?
சுந்தராபுரம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் கைகொடுக்குமா?
சுந்தராபுரம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் கைகொடுக்குமா?
ADDED : ஜூன் 17, 2025 11:08 PM

போத்தனூர்; கோவை மாநகரில போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு மாற்றங்களை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில் கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுந்தராபுரம் , நான்கு சாலை சந்திப்பில், யூ டர்ன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சந்திப்பில் ஈச்சனாரி நோக்கி செல்லும் வாகனங்கள் சங்கம் வீதி (ஒரு வழி) வழியாக சாரதா மில் சாலையில் (ஒரு வழி) வலதுபுறம் திரும்பி, மீண்டும் பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்ல வேண்டும்.
ஆத்துப்பாலம், போத்தனூர் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம். மதுக்கரை மார்க்கெட் சாலைக்கு செல்லும் வாகனங்கள், எல்.ஐ.சி.காலனி சென்று அங்கிருந்து வலதுபுறம் திரும்பி, குறிச்சி ஹவுசிங் யூனிட் சாலை வழியே, மதுக்கரை மார்க்கெட் சாலைக்கு செல்ல வேண்டும்.
இம்மாற்றம் நேற்று முதல், சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, சங்கம் வீதி சாலையின் துவக்கத்தில் போடப்பட்டிருந்த மையத்தடுப்பு, வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
இத்திடீர் மாற்றம் குறித்து தெரியாமல், வழக்கம்போல வந்த வாகன ஓட்டிகளை, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி திரும்பச் செய்தனர்.