Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பஸ்களில் செல்வோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?

அரசு பஸ்களில் செல்வோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?

அரசு பஸ்களில் செல்வோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?

அரசு பஸ்களில் செல்வோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?

ADDED : மே 10, 2025 02:21 AM


Google News
பொள்ளாச்சி,: அரசு பஸ்களில், தீ தடுப்பு உபகரணங்கள், மருந்து பொருட்களை உள்ளடக்கிய முதலுதவி பெட்டி, வழித்தட மேப் இல்லாதிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி பணிமனை 1, பணிமனை 2, மற்றும் பணிமனை, 3ல் இருந்து, புறநகர் மற்றும் கிராமங்களுக்கு, 150க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, கோவை, உடுமலை, பழநி உள்ளிட்ட கிளைகளைச் சேர்ந்த பஸ்களும், பொள்ளாச்சி மார்க்கமாகவே இயக்கப்படுகிறது.

பலரும், பணி நிமித்தமாக அருகே உள்ள நகரங்களுக்குச் சென்று திரும்ப, பஸ் பயணத்தையே நம்பியே உள்ளனர். ஆனால், எந்தவொரு பஸ்சிலும் தீ தடுப்பு உபகரணம், மருந்துப் பொருட்களை உள்ளடக்கிய முதலுதவி பெட்டி, வழித்தட மேப் இருப்பதில்லை என, புகார் தெரிவிக்கப்படுகிறது.

பயணியர் கூறியதாவது: தற்போது, கோடை விடுமுறை என்பதால், பஸ்சில் ஊர்களுக்கு சென்று திரும்ப அதிகளவிலான மக்கள் முற்படுகின்றனர். புதிதாக இவ்வழித்தடத்தில் பயணிப்போர், வழித்தடத்தை அறிந்து கொள்ள முற்பட்டால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. பஸ்சில் வழித்தட மேப் கிடையாது.

இதேபோல, பயணியருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப் பொருட்கள், தீ தடுப்பு உபகரணங்களும் கிடையாது. பயணியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமலேயே பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us