/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சனி தோறும் சிறப்பு வகுப்பு பெற்றோர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? சனி தோறும் சிறப்பு வகுப்பு பெற்றோர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
சனி தோறும் சிறப்பு வகுப்பு பெற்றோர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
சனி தோறும் சிறப்பு வகுப்பு பெற்றோர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
சனி தோறும் சிறப்பு வகுப்பு பெற்றோர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
ADDED : ஜூன் 21, 2025 12:32 AM
பொள்ளாச்சி : அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சனிக்கிழமை தோறும் சிறப்பு வகுப்புடன் அலகு தேர்வு நடத்த வேண்டுமென, பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், குறிப்பிட்ட சில அரசு மேல்நிலைப்பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் நடத்தியும் அவ்வப்போது அலகு தேர்வு நடத்தியும் மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் கூட பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொண்டு, தேர்ச்சி அடைகின்றனர்.
அதேபோன்று, அரசு பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும், என்பது பெற்றோர் எதிர்பார்ப்பாக உள்ளது.
பெற்றோர் கூறியதாவது:
பள்ளி முடிந்து, வீடு திரும்பும் மாணவர்கள், முறையாக படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சனிக்கிழமைதோறும் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்.
அன்று, ஒரு பாடம் மட்டும் பயிற்றுவிக்க வேண்டும். அது குறித்து, மதியத்திற்கு மேல் வினாக்கள் தயாரித்து தேர்வு நடத்த வேண்டும். சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்கள் முனைப்பு காண வேண்டும். மாணவர்களின் மீதான ஆசிரியர்களின் அக்கறை மட்டுமே தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கச் செய்யும். அப்பேது தான், அரசு பள்ளி மாணவர்களின் கல்லுாரி கனவும் நனவாகும்.
இவ்வாறு, கூறினர்.