/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வனப்பகுதியில் இருந்து ரோலெக்ஸை 'அவுட்' ஆக்கி விடுமா 'கபில்தேவ்?' போளுவாம்பட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு வனப்பகுதியில் இருந்து ரோலெக்ஸை 'அவுட்' ஆக்கி விடுமா 'கபில்தேவ்?' போளுவாம்பட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு
வனப்பகுதியில் இருந்து ரோலெக்ஸை 'அவுட்' ஆக்கி விடுமா 'கபில்தேவ்?' போளுவாம்பட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு
வனப்பகுதியில் இருந்து ரோலெக்ஸை 'அவுட்' ஆக்கி விடுமா 'கபில்தேவ்?' போளுவாம்பட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு
வனப்பகுதியில் இருந்து ரோலெக்ஸை 'அவுட்' ஆக்கி விடுமா 'கபில்தேவ்?' போளுவாம்பட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 10, 2025 10:24 PM

தொண்டாமுத்துார்; போளுவாம்பட்டி மற்றும் கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், ஆண் காட்டு யானை, விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி, மனிதர்களையும் தாக்கி வருகிறது.
இப்பகுதி மக்கள், இந்த யானைக்கு 'ரோலெக்ஸ்' என பெயரிட்டுள்ளனர். பயிர்களை சேதப்படுத்துவதால், இந்த யானையை வேறிடத்துக்கு இடம் மாற்ற, இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து நரசிம்மன், முத்து என்கிற 2 கும்கி யானைகள், 5ம் தேதி இரவு, தாளியூர், யானைமடுவு பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, தனியார் தோட்டத்தில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது 'கபில்தேவ்' என பெயரிடப்பட்ட கும்கி வரவழைக்கப்பட்டு உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'ரோலெக்ஸ் யானை, வனப்பகுதியை விட்டு வெளியே வரவில்லை. 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எதிர்பார்க்கும் இடத்துக்கு வந்ததும் பிடிப்பதற்கான நடவடிக்கை துவக்கப்படும். 'ரோலெக்ஸ்' யானை, உடல் எடை அதிகமாக இருப்பதால், அதற்கு இணையான, 'கபில்தேவ்' என்கிற கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில், 'ரோலெக்ஸ்' யானையை பிடித்து விடுவோம்' என்றனர்.
யானைக்கு
கபில்தேவ்
பெயர் சூட்ட காரணம்
இ ந்திய கிரிக்கெட் அணி, 1983ல் உலக கோப்பையை வென்றது. அந்தாண்டு, டாப்சிலிப் முகாமில் பிறந்த யானை குட்டிக்கு, இந்திய அணியின் அப்போதைய கேப்டனாக இருந்த, கபில்தேவ் பெயரை சூட்டினர். 42 வயதான கபில்தேவ் கும்கி யானை, 9½ அடி உயரம், 4,800 கிலோ எடையுடன், கம்பீரமாக உள்ளது. இதன் உடன்பிறந்த சகோதரர்களான சுஜய், விஜய் ஆகியோரும், டாப்சிலிப் யானைகள் முகாமில் கும்கிகளாக உள்ளன. கபில்தேவ் கும்கி யானை, 30க்கும் மேற் பட்ட நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.