/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மத்திய சிறை பிளீச்சிக்கு மாறுமா, மாறாதா? தமிழக அரசின் 'பளிச்' உத்தரவுக்கு காத்திருப்புமத்திய சிறை பிளீச்சிக்கு மாறுமா, மாறாதா? தமிழக அரசின் 'பளிச்' உத்தரவுக்கு காத்திருப்பு
மத்திய சிறை பிளீச்சிக்கு மாறுமா, மாறாதா? தமிழக அரசின் 'பளிச்' உத்தரவுக்கு காத்திருப்பு
மத்திய சிறை பிளீச்சிக்கு மாறுமா, மாறாதா? தமிழக அரசின் 'பளிச்' உத்தரவுக்கு காத்திருப்பு
மத்திய சிறை பிளீச்சிக்கு மாறுமா, மாறாதா? தமிழக அரசின் 'பளிச்' உத்தரவுக்கு காத்திருப்பு
ADDED : ஜன 31, 2024 12:37 AM
கோவை:கோவை மத்திய சிறையை, பிளீச்சிக்கு மாற்றுவது தொடர்பாக, தமிழக அரசின் பதிலுக்கு, மாவட்ட நிர்வாகம் காத்திருக்கிறது.
கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையை வேறிடத்துக்கு மாற்றி விட்டு, அப்பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, காரமடை அருகே பிளீச்சிக்கு சிறையை மாற்றுவது தொடர்பாக, தமிழக உள்துறை செயலர் அமுதா, கடந்தாண்டு அக்., மாதம் கோவையில் ஆய்வு செய்தார்.
காந்திபுரத்தில் தற்போதுள்ள சிறை வளாகம் போலவே, பிளீச்சியில் சதுர வடிவில் அமைப்பதற்கு, தேர்வு செய்துள்ள, 95 ஏக்கர் பூமி தான நிலத்துக்கு அருகாமையில் உள்ள, 38 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
அதில், 30 ஏக்கர் நிலத்துக்கு, அரசுக்கு சொந்தமான நிலத்தை, மாற்று இடமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. மீதமுள்ள எட்டு ஏக்கர் மற்றும் சாலை வசதி ஏற்படுத்த இரண்டு ஏக்கர் என, 10 ஏக்கர் நிலம், விலை கொடுத்து வாங்க வேண்டும்.
இதற்கு மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இரு மாதங்களுக்கு மேலாகியும், தமிழக அரசு முடிவெடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறது.
வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மத்திய சிறையை பிளீச்சிக்கு மாற்றுவது தொடர்பாக திட்ட அறிக்கையை அரசுக்கு அனுப்பி விட்டோம்; இன்னும் பதில் வரவில்லை.
95 ஏக்கர் பூமி தான நிலத்தை சிறைத்துறைக்கு வழங்கி விட்டோம். 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, முன்மொழிவு அனுப்பியுள்ளோம். பரிசீலனை செய்து, இறுதி உத்தரவு வழங்கவில்லை' என்றனர்.