/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெள்ளைப்பூச்சி தாக்குதல்; தென்னை பாதிப்பால் கவலைவெள்ளைப்பூச்சி தாக்குதல்; தென்னை பாதிப்பால் கவலை
வெள்ளைப்பூச்சி தாக்குதல்; தென்னை பாதிப்பால் கவலை
வெள்ளைப்பூச்சி தாக்குதல்; தென்னை பாதிப்பால் கவலை
வெள்ளைப்பூச்சி தாக்குதல்; தென்னை பாதிப்பால் கவலை
ADDED : ஜன 03, 2024 11:56 PM
உடுமலை : தென்னை மரங்களில் வெள்ளைப்பூச்சி தாக்குதல் அதிகரிக்க துவங்கியுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, அவிநாசி, பொங்கலுார், பல்லடம், ஊத்துக்குளி உள்ளிட்ட பல இடங்களில், ஏராளமான விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நாட்களாக, தென்னை மரங்களில் வெள்ளைப்பூச்சி தாக்குதல் என்பது அதிகரிக்க துவங்கியுள்ளது; பூச்சி பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள், பழுப்பு நிறமாக மாறியுள்ளன.
தென்னை விவசாயிகள் கூறியதாவது:
தேங்காய் விலை சரிவு, உரங்களின் கடுமையான விலையேற்றம், கொப்பரைக்கு அரசு நிர்ணயித்த தொகை முழுமையாக கிடைக்காதது, தேங்காய் நார் உள்ளிட்ட தென்னை சார் தொழில்களில் ஏற்பட்ட பாதிப்பு என, ஏற்கனவே, தென்னை விவசாயிகள் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்; வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தென்னையை தாக்கும் வெள்ளைப்பூச்சியால் மகசூல் இழப்பு உள்ளிட்ட கூடுதல் பாதிப்பு ஏற்படும்.
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை வேளாண்மை பல்கலை சார்பில், வெள்ளைப்பூச்சியை அழிக்க ஒட்டுண்ணிகள் வழங்கப்படுகின்றன.
இவற்றை தினமும், பாதிப்புக்கேற்ற வகையில், தடையின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இப்பாதிப்பு பரவாமல் தடுப்பதற்குரிய ஏற்பாடுகளில், தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.