/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு எப்போது 'நல்ல காலம்' பிறக்குமோ?நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு எப்போது 'நல்ல காலம்' பிறக்குமோ?
நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு எப்போது 'நல்ல காலம்' பிறக்குமோ?
நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு எப்போது 'நல்ல காலம்' பிறக்குமோ?
நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு எப்போது 'நல்ல காலம்' பிறக்குமோ?
ADDED : ஜூன் 15, 2025 10:20 PM

தமிழகம் முழுவதும், 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என, 2022ம் ஆண்டு அரசு அறிவித்தது. இதையடுத்து, ஒரே ஆண்டில், 500 மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு, 2023ம் ஆண்டு திறக்கப்பட்டன.
மீதமுள்ள, 208 மையங்கள் கட்டப்பட்டு வந்தன. கோவை மாநகராட்சி பகுதிகளில், 19 மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மத்திய மண்டலம், 63வது வார்டுக்கு உட்பட்ட ராமநாதபுரம் அடுத்த ஒலம்பஸ், 47வது வார்டு ரத்தினபுரி முத்துக்குமார் நகர், 82வது வார்டு வைசியாள் வீதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
தவிர, கிழக்கு மண்டலம், 23வது வார்டு மதுசூதன் நகர், 54வது வார்டு நீலிக்கோணாம்பாளையம், 56வது வார்டு ஒண்டிப்புதுார், மத்திய மண்டலம், 32வது வார்டு ரத்தினபுரி வேலம்மாள் நகர், 49வது வார்டு பாப்பநாயக்கன்பாளையம், 6வது வார்டு கருப்பராயன்பாளையத்தில் கட்டப்பட்டுள்ளன.
தெற்கு மண்டலம், 92வது வார்டு பி.கே.புதுார் பாலு கார்டன், 78வது வார்டு செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட், மேற்கு மண்டலம், 38வது வார்டு ஓணாப்பாளையம், 75வது வார்டு, நேதாஜி நகர் உட்பட, 19 மையங்கள் கட்டி முடித்து திறக்க தயாராக உள்ளது.
ஒவ்வொரு மையமும், தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. கடந்த ஏப்., மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 208 மையங்களும் ஒரு மாதத்துக்குள் திறக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் அறிவித்தும் இன்னும் திறக்கப்படாததால், அப்பகுதி மக்கள் பல கி.மீ., பயணித்து வேறு சுகாதார நிலையங்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர்.
எனவே, உடனடியாக இந்நலவாழ்வு மையங்களை, முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.