/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோடு பிரச்னைக்கு எப்போது பிறக்கும் வழி? ரோடு பிரச்னைக்கு எப்போது பிறக்கும் வழி?
ரோடு பிரச்னைக்கு எப்போது பிறக்கும் வழி?
ரோடு பிரச்னைக்கு எப்போது பிறக்கும் வழி?
ரோடு பிரச்னைக்கு எப்போது பிறக்கும் வழி?
ADDED : செப் 21, 2025 11:32 PM

மா நகராட்சி வடக்கு மண்டலம், 18வது வார்டு கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையம், சங்கனுார் லட்சுமி நகர், புதுத்தோட்டம், அருணா நகர், ஜெயா நகர், ராமசாமி நகர், ரங்கா லே-அவுட், சபரி கார்டன், மணீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள், பாதாள சாக்கடை திட்டத்துக்காக, ரோடுகள் தோண்டப்பட்டதை பிரதான பிரச்னையாக முன்வைக்கின்றனர்.
முன்பு, 18வது வார்டுடன் இருந்த பாலாஜி நகர், விஜயா நகர் ஆகியன, 13வது வார்டுடன் இணைக்கப்பட்டதால், எல்லையில் இருக்கும் இப்பகுதிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்பது மற்றொரு முக்கிய பிரச்னை.
அபாய கிணறு சரஸ்வதி நகரில் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக ரோடு தோண்டப்பட்டது. இதுவரை போடவில்லை. குழந்தைகள், பெரியவர்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர். இங்கு ரோட்டின் வளைவில் கிணறு ஒன்று உள்ளது. இக்கிணற்றை சுற்றி பாதுகாப்புக்கு கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வேலி சரிந்து கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. இந்த வழித்தடத்தில் சைக்கிளில் குழந்தைகள் பயணிக்கின்றனர். எனவே, விபத்து நடக்கும் முன் மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். - - சுகன்யா இல்லத்தரசி
பஸ் வசதி 'கட்' நல்லாம்பாளையம் பகுதிக்கு முன்பு பஸ் வசதியே கிடையாது. இயங்கிவந்த பஸ்களை திடீரென நிறுத்திவிட்டனர். மணியகாரம்பாளையம், கவுண்டம்பாளையம் பகுதிகளுக்கு சுமார், 2 கி.மீ., மேல் நடந்துசென்றால் மட்டுமே, நகருக்கு செல்ல பஸ் வசதி கிடைக்கும். இதனால், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே செல்கிறோம். மருத்துவம் போன்ற அவசர காலங்களில் பெரும் சிரமங்களை இப்பகுதி மக்கள் சந்திக்கின்றனர். பல்வேறு அம்சங்கள் மிகுந்த இப்பகுதிக்கு பஸ் வசதி இல்லாதது அலைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. - திலகவதி கோவில் திருப்பணி
கால்வைக்க முடியவில்லை! சங்கனுார் லட்சுமி நகர், புதுத்தோட்டம் உட்பட வார்டின் பெரும்பாலான இடங்களில் யு.ஜி.டி., பணிகள் நடந்துவருகின்றன. ரோட்டை தோண்ட காட்டும் வேகத்தை, முடிப்பதற்கு காட்டுவதில்லை. இதனால் மழை காலங்களில் வெளியே கால் வைக்க முடிவதில்லை. பள்ளி குழந்தைகள், பெரியவர்கள் கீழே விழுந்து எழுவது தொடர்கதையாக உள்ளது. மகளிர் உரிமைத்தொகை கோரி இரண்டு முறை விண்ணப்பித்தும் தொகை கிடைக்கவில்லை. உண்மையான பயனாளிகளுக்கு இத்தொகை கிடைக்க வேண்டும். -தமிழ்ச்செல்வி இல்லத்தரசி
திட்டமிடல் இல்லை பாலாஜி நகர் உள்ளிட்டவை, 18வது வார்டுடன் இருந்திருந்தால் வளர்ச்சி பணிகள் கிடைத்திருக்கும். ஒரு ரோடு எல்லையாக இருப்பதால் பெரும் சிரமங்களை சந்திக்கிறோம். பாலாஜி நகரில், 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் லாரிகளில் வந்தடைகிறது. ரோடு மோசமாக இருப்பதால் விபத்துகள் நடக்கின்றன. 18வது வார்டு பகுதிகளில், 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட யு.ஜி.டி., குழாய்களில் அடைப்பு உள்ளிட்ட காரணங்களால், கழிவுநீர் வீடுகளுக்குள் 'ரிவர்ஸ்' எடுக்கிறது. எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். - ஜானகி இல்லத்தரசி