/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு எப்போது? தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு எப்போது? தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு எப்போது? தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு எப்போது? தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு எப்போது? தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
ADDED : ஜன 03, 2024 11:57 PM
உடுமலை : இறுதி பட்டியல் வெளியிடும் நாள், 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த, 1ம் தேதி, 18 வயது பூர்த்தியான இளையோரை வாக்காளராக இணைப்பதற்காக, கடந்த அக்., 27ம் தேதி முதல் டிச., 9ம் தேதி வரை நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்றது.
மொத்தமுள்ள, 2,520 ஓட்டுச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி, தொகுதி மாற்றங்களுக்கான படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டது; நான்கு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 33,893 பேர், நீக்கத்துக்கு 4,921 பேர், பல்வேறு திருத்தங்களுக்காக, 23,421 பேர், என, மொத்தம் 62,235 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்ப்பு பணிகளை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலரான தாசில்தார்கள் நிறைவு செய்துள்ளனர்.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிப்பு பணி முடிவடைந்துவிட்டது. நாளைய இறுதி பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை மற்றும் துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மழை பாதிப்பு காரணமாக, பட்டியல் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகம் முழுவதும் இறுதி பட்டியல் வெளியிடும் நாள், 22 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முடிந்து, இறுதி பட்டியல் தயார்நிலையில் வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.