/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'இ-சேவை' மையத்தில் ஆதார் திருத்தம் முடக்கம்; டெக்னீசியன் நியமனம் எப்போது? 'இ-சேவை' மையத்தில் ஆதார் திருத்தம் முடக்கம்; டெக்னீசியன் நியமனம் எப்போது?
'இ-சேவை' மையத்தில் ஆதார் திருத்தம் முடக்கம்; டெக்னீசியன் நியமனம் எப்போது?
'இ-சேவை' மையத்தில் ஆதார் திருத்தம் முடக்கம்; டெக்னீசியன் நியமனம் எப்போது?
'இ-சேவை' மையத்தில் ஆதார் திருத்தம் முடக்கம்; டெக்னீசியன் நியமனம் எப்போது?
ADDED : ஜூலை 03, 2025 08:21 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு 'இ--சேவை' மையத்தில், ஆதார் திருத்தம் செய்வதற்காக, புதிய டெக்னீசியன் நியமிக்கப்படவுள்ளதாக வருவாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரேஷன் கார்டு, பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்கை, பத்திரப்பதிவு, சலுகைகளுக்கான அரசுத்துறை சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்க, ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் திருத்த பணிகளை மேற்கொள்ள, பொள்ளாச்சி தாலுகாவிற்கு என, தாசில்தார் அலுவலக வளாகத்தில், அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தால் நடத்தப்படும் 'இ----சேவை' மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தினமும், பலர், பெயர், பிறந்த தேதி, மொபைல்போன் எண், பெற்றோர் பெயரில் திருத்தம், முகவரி தொடர்பான மாற்றங்களுக்காக இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், கடந்த பிப்., மாதத்தில் இருந்து, டெக்னீசியன் பணியிடம் காலியாக உள்ளது.
மாறாக, ஆதார் திருத்தம் தொடர்பாக, தபால் அலுவலகம், நகராட்சி, தேசிய, கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த மையங்களுக்கு செல்லுமாறும் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
அங்கும், நாள்தோறும், குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் ஆதார் திருத்தம் செய்யப்படாததால், செய்வதறியாது பொதுமக்கள் திணறுகின்றனர். இந்நிலையில், அரசு 'இ-சேவை' மையத்தில், விரைவில் புதிய டெக்னீசியன் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் தாலுகா 'இ--சேவை' மையங்களில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களில், தகுதியான நபர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவில் உள்ள அரசு 'இசேவை' மையங்களில் டெக்னீசியன் நியமனத்திற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்படுகிறது. சில தினங்களுக்குள் அவர்கள் பணியை தொடர உள்ளனர்.
இவ்வாறு, கூறினர்.