/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சக்கர நாற்காலி கூடைப்பந்து: அசத்திய வீரர், வீராங்கனைகள் சக்கர நாற்காலி கூடைப்பந்து: அசத்திய வீரர், வீராங்கனைகள்
சக்கர நாற்காலி கூடைப்பந்து: அசத்திய வீரர், வீராங்கனைகள்
சக்கர நாற்காலி கூடைப்பந்து: அசத்திய வீரர், வீராங்கனைகள்
சக்கர நாற்காலி கூடைப்பந்து: அசத்திய வீரர், வீராங்கனைகள்
ADDED : ஜூன் 04, 2025 12:38 AM

கோவை:
கங்கா ஸ்பைன் காயம் மற்றும் மறுவாழ்வு மையத்தின் சார்பில், 7வது தமிழ்நாடு மாநில சக்கர நாற்காலி கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, கவுண்டம்பாளையம் கங்கா ஸ்பைன் மையத்தில் நடந்தது.
ஆண்கள் பிரிவில் கோவை, ஈரோடு, வேலுார் அணிகள் பங்கேற்றன. வேலுார் ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோவை இரண்டாம் இடமும், ஈரோடு மூன்றாம் இடத்தையும் தக்கவைத்தது. பெண்கள் பிரிவில் ஈரோடு, சென்னை, வேலுார் அணி கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. சென்னை முதலிடத்தையும், ஈரோடு இரண்டாம் இடத்தையும், வேலுார் மூன்றாம் இடத்தையும் பெற்றன. பரிசளிப்பு விழாவில் கோவை கலெக்டர் வெற்றி கோப்பையை வழங்கி பாராட்டினார். கங்கா மருத்துவமனை சீனியர் பதிவாளர் டாக்டர் ராஜா பாஸ்கர ராஜசேகரன், தலைமை நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.