Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகராட்சி நிர்வாகமே 'என் கேள்விக்கென்ன பதில்?' காரசார கேள்விகளால் போட்டுத்தாக்குகிறார் முன்னாள் கவுன்சிலர்

மாநகராட்சி நிர்வாகமே 'என் கேள்விக்கென்ன பதில்?' காரசார கேள்விகளால் போட்டுத்தாக்குகிறார் முன்னாள் கவுன்சிலர்

மாநகராட்சி நிர்வாகமே 'என் கேள்விக்கென்ன பதில்?' காரசார கேள்விகளால் போட்டுத்தாக்குகிறார் முன்னாள் கவுன்சிலர்

மாநகராட்சி நிர்வாகமே 'என் கேள்விக்கென்ன பதில்?' காரசார கேள்விகளால் போட்டுத்தாக்குகிறார் முன்னாள் கவுன்சிலர்

ADDED : ஜன 10, 2024 12:29 AM


Google News
கோவை:கட்டட அனுமதி விஷயத்தில், அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பியுள்ள முன்னாள் கவுன்சிலர் ஒருவர், 'அனுமதிக்கு முன்பே கட்டடம் கட்டினால் அபராதம்' என்ற அறிவிப்பை, 'வாபஸ்' பெற வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசானது, கட்டட அனுமதியை எளிமையாக்கும் விதமாக, onlineppa.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக, ஒற்றை சாளர முறையை அமல்படுத்தியுள்ளது.

ஆனால், விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் அனுமதி கிடைப்பது என்பது எட்டா கனியாக இருப்பதாக, பொது மக்கள் புலம்புகின்றனர்.

இப்படியிருக்க, அனுமதிக்கு முன்பு கட்டடம் கட்டினால் அபராதம் வசூலிக்கப்படும் என, கடந்த, 4ம் தேதி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், கட்டட அனுமதி விஷயத்தில் பல்வேறு கேள்வி களை, மாநகராட்சி நிர்வாகத்திடம் எழுப்பியுள்ளார், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி (ம.தி.மு.க.,).

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனுக்கு, அவர் அனுப்பியுள்ள 'காரசார' கடிதம் இதோ:

n அனுமதி வழங்கும் முன்பே கட்டடம் கட்டினால், 25 முதல் 150 சதவீதம் வரை அபராதம் என்ற அறிவிப்பு, மக்களை மிரட்டும் செயல். கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்து, மாதக்கணக்கில் நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது, உங்கள் நடவடிக்கை என்ன?

n விண்ணப்பம் கொடுத்த, 30 நாட்களுக்குள் அனுமதி கொடுக்க உங்கள் அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளீர்களா?

n விண்ணப்பதாரர்களிடம், மேலிட பிரதிநிதிகள் மாநகராட்சி அலுவலகத்திலிருந்தே தொலைபேசியில் தொடர்பு கொண்டு லஞ்சம் கேட்பதும், பணம் கொடுத்தால் மட்டுமே கட்டட அனுமதி கொடுப்பதும், உங்களுக்கு தெரியுமா?

n மாநகராட்சி அனைத்து துறைகளிலும், லஞ்சம் வாங்க வெளி ஆட்கள் அங்கேயே இருப்பது உங்களுக்கு தெரியுமா? அதை கட்டுப்படுத்த உங்கள் நடவடிக்கை தான் என்ன?

n மாநகராட்சியில் யாரோ சதுரடி கணக்கில், வாங்கும் லஞ்சம் யாருக்கோ போக, நாம் ஏன் வேலை செய்ய வேண்டும் என, அதிகாரிகள், பணியாளர்கள் மத்தியில் ஒரு தாக்கம் ஏற்பட்டு, கோப்புகள் பல தேங்கி இருப்பது உங்களுக்கு தெரியுமா?

இதற்கெல்லாம் தீர்வு எப்போது என, மக்கள் ஏங்கி நிற்கும் நிலையில், அபராதம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பை, 'வாபஸ்' பெற வேண்டும். ஒரு நல்ல நிர்வாகத்தை தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

அத்தனையும் அறிவீர்கள்!

'விண்ணப்பித்து உத்தரவு கிடைக்காதவர்கள், 'எனது அலுவலகத்தை அணுகலாம்' என, ஓர் அறிவிப்பை வெளியிடுங்கள். நிலைமையை அப்போது நீங்கள் அறிய முடியும். மாநகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மோசமான நிர்வாகம் இருப்பது, வேதனை தருகிறது' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கிருஷ்ணசாமி.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us