/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆதித்யா இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வரவேற்பு ஆதித்யா இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வரவேற்பு
ஆதித்யா இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வரவேற்பு
ஆதித்யா இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வரவேற்பு
ஆதித்யா இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : செப் 10, 2025 10:35 PM

கோவை; குரும்பபாளையம் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.
சி.எச்.ஆர்.ஓ., நிறுவன தலைமை அதிகாரி சசிகாந்த், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கணினி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் தனது தொழில் அனுபவங்களை, மாணவர் களுடன் பகிர்ந்து கொண்டார்.
முன்னாள் மாணவர்கள் தங்கள் வெற்றிக்கதைகளை பகிர்ந்து, கல்லுாரி வாய்ப்புகள், ஆசிரியர்கள் வழிகாட்டுதல் எவ்வாறு தங்களை மேம்படுத்தியது என்பதை குறிப்பிட்டு, புதிய மாணவர்களை ஊக்குவித்தனர். கல்லுாரி நிறுவனர் சுகுமாரன், அறங்காவலர் பிரவீன் குமார், இயக்குனர் ஜோசப் தனிகல், முதல்வர் சோமசுந்தரேஸ்வரி, கல்வி டீன் ராஜேந்திரன், துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.