/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பார்க் கல்லுாரிகளில் களைகட்டிய கலைவிழா பார்க் கல்லுாரிகளில் களைகட்டிய கலைவிழா
பார்க் கல்லுாரிகளில் களைகட்டிய கலைவிழா
பார்க் கல்லுாரிகளில் களைகட்டிய கலைவிழா
பார்க் கல்லுாரிகளில் களைகட்டிய கலைவிழா
ADDED : மே 11, 2025 12:18 AM

கோவை: கணியூரில் அமைந்துள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பார்க் தொழில்நுட்ப கல்லுாரிகளில், இரண்டு நாள் கலை திருவிழா, ஆண்டு விழா விமர்சையாக நடந்தது. பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா, விழாவிற்கு தலைமை வகித்தார்.
ஓவியம், புகைப்படம், குறும்படம், பாடல், மைம், ரீல்ஸ் மேக்கிங் என பல்வேறு போட்டிகளில் 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகளைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பார்க் பொறியியல் கல்லுாரியின் முன்னாள் மாணவர் மற்றும் இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற கமாண்டர் அரவிந்தன், தற்போது நடந்து வரும் இந்தியா - பாகிஸ்தான் போர் சூழல் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
நடிகை பிரியா வாரியர் மாணவர்களுடன் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னணி பாடகர்கள் ஆதித்யா, ரேஷ்மா ஆகியோர் அசத்தல் பாடல்கள் மூலம் மாணவர்களை உற்சாகப் படுத்தினர்.
சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.