/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
ADDED : ஜூன் 25, 2025 10:42 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அடுத்த பெள்ளாதி ஊராட்சி, சின்னத்தொட்டிபாளையத்தில் அமிர்த வர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பத்தாம் ஆண்டு திருக்கல்யாணம் வைபவம், இன்று காலை நடைபெற உள்ளது.
இன்று காலை மகா கணபதி வழிபாடுடன், மகா சங்கல்பம், மூலமந்திர மகா யாகம் கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து சின்னதொட்டிபாளையம், சேரன் நகர், நீலகிரி நெஸ்ட் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வர உள்ளனர்.
காலை, 10:45 மணிக்கு மேல், 11:45 மணிக்குள் அமிர்த வர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மாலை திருக்கல்யாண கோலத்தில் அமிர்தவர்ஷினி நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற உள்ளது.