/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பதிவாகும் ஓட்டுக்களில் 70 சதவீதம் பெற வேண்டும்!' 'பதிவாகும் ஓட்டுக்களில் 70 சதவீதம் பெற வேண்டும்!'
'பதிவாகும் ஓட்டுக்களில் 70 சதவீதம் பெற வேண்டும்!'
'பதிவாகும் ஓட்டுக்களில் 70 சதவீதம் பெற வேண்டும்!'
'பதிவாகும் ஓட்டுக்களில் 70 சதவீதம் பெற வேண்டும்!'
ADDED : ஜூன் 15, 2025 09:47 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தெற்கு நகர தி.மு.க., வார்டு செயலாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கட்சியின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும் உறுப்பினர் சேர்க்க வேண்டும். வாக்காளர் சரிபார்த்தலை வேகப்படுத்த வேண்டும்.அந்தந்த பகுதிகளுக்கு நகராட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் நேரடியாக சென்று மக்களை சந்தித்து, அடிப்படை தேவைகளை கேட்டறிய வேண்டும். பொள்ளாச்சி தெற்கு நகரத்துக்கு உட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பதிவாகும், ஓட்டுக்களில், 70 சதவீதம் ஓட்டுக்களை பெற வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்ற வேண்டும், என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவுன்சிலர் நாச்சிமுத்து நன்றி கூறினார். தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து, பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் பங்கேற்றனர்.