/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெப்பம் தணிக்க வந்தாச்சு தர்பூசணி!வெப்பம் தணிக்க வந்தாச்சு தர்பூசணி!
வெப்பம் தணிக்க வந்தாச்சு தர்பூசணி!
வெப்பம் தணிக்க வந்தாச்சு தர்பூசணி!
வெப்பம் தணிக்க வந்தாச்சு தர்பூசணி!
ADDED : ஜன 31, 2024 12:32 AM

கோவை:பகல் நேரங்களில் வெயில் சூடு மெல்ல அதிகரித்து வருகிறது. அதனால் வெப்பம் தணிக்கும் தர்பூசணி பழங்களின் விற்பனை துவங்கி உள்ளது.
தமிழகத்தில் தர்மபுரி, மரக்காணம், ஆலந்துார், கும்முடிபூண்டி, திருத்தணி மற்றும் கொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகம் பயிரிடப்பட்டு, பிப்ரவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குட்செட் ரோடு பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் கூறுகையில், 'சீசன் இப்போதுதான் துவங்கி இருக்கிறது. இந்த மாதம் விற்பனை சுமாராகதான் இருக்கும். மார்ச், ஏப்ரலில் வெயில் அதிகரிக்கும்போது, விற்பனையும் சூடு பிடிக்கும்' என்றனர்.