/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நாளை நீர் திறப்புஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நாளை நீர் திறப்பு
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நாளை நீர் திறப்பு
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நாளை நீர் திறப்பு
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நாளை நீர் திறப்பு
ADDED : பிப் 10, 2024 11:44 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, நாளை, 12ம் தேதி முதல், 40 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது.
கடந்தாண்டு போதிய பருவமழை இல்லாததால், பாசனத்துக்கு நீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உயிர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது.
தொடர்ந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள நிலை பயிர்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் வழங்க வேண்டுமென புதிய ஆயக்கட்டு விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வினியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனம், 'ஆ' மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு உயிர் தண்ணீர் தேவைக்காக, நாளை (12ம் தேதி) முதல் மார்ச், 23ம் தேதி வரை, 40 நாட்களில் தகுந்த இடைவெளி விட்டு, 19 நாட்கள் தண்ணீர் திறப்பு என்ற அடிப்படையில், நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மொத்தம், 610 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் வாயிலாக, 22,332 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.