/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
ADDED : மே 23, 2025 01:08 AM
கோவில்பாளையம், : வரி செலுத்தாத வீடுகளில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், கொண்டையம் பாளையம், அத்திப்பாளையம், அக்ரஹார சாமக்குளம், வெள்ளமடை, கீரணத்தம், கள்ளிப்பாளையம், வெள்ளானைப்பட்டி ஆகிய ஏழு ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, உரிமக் கட்டணம் ஆகியவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதில் 2024--25ம் ஆண்டுக்கான வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி நடந்து வருகிறது.
கொண்டையம்பாளையம் ஊராட்சியில், நேற்று முன்தினம் வரி செலுத்தாத வீட்டில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டால், மீண்டும் புதிய இணைப்பு தரப்பட மாட்டாது. கடந்த நிதியாண்டுக்கான வரி செலுத்தாதவர்கள் வரியை நிலுவை இல்லாமல் செலுத்தி ஊராட்சி வளர்ச்சி பணிக்கு ஒத்துழைக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளனர்.