/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பராமரிப்பின்றி வீணாகும் தொட்டி; மகளிர் சுய உதவி குழு கட்டடம் பராமரிப்பின்றி வீணாகும் தொட்டி; மகளிர் சுய உதவி குழு கட்டடம்
பராமரிப்பின்றி வீணாகும் தொட்டி; மகளிர் சுய உதவி குழு கட்டடம்
பராமரிப்பின்றி வீணாகும் தொட்டி; மகளிர் சுய உதவி குழு கட்டடம்
பராமரிப்பின்றி வீணாகும் தொட்டி; மகளிர் சுய உதவி குழு கட்டடம்
ADDED : மே 21, 2025 11:18 PM

நெகமம், ; நெகமம் அருகே உள்ள, ஆண்டிபாளையத்தில் உபயோகம் இல்லாமல் இருக்கும் தண்ணீர் தொட்டி மற்றும் சுய உதவிக் குழு கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.
நெகமம் அருகே உள்ள, ஆண்டிபாளையம் ஊராட்சியில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் தொட்டி, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், தற்போது இந்த தண்ணீர் தொட்டியின் குழாய்கள் சேதமடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதே போன்று, இங்கு கடந்த 2003ம் ஆண்டு கட்டப்பட்ட சுய உதவி குழு கட்டடம், 2014-15ம் ஆண்டில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டது. அதன்பின், இந்த கட்டடம் எந்த உபயோகமும் இன்றி கேட்பாரற்று கிடக்கிறது. தற்போது இந்த கட்டடத்தின் கதவுகள் சேதமடைந்து காணப்படுகிறது. இங்கு சமூகவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த கட்டடத்தில் புனரமைப்பு பணி மேற்கொண்டு, பத்தாண்டுகள் ஆகிவிட்டதால், தற்போது மீண்டும் புனரமைப்பு பணிகள் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். அல்லது இந்த கட்டடத்தை இடித்து விட்டு மக்கள் பயன்பெறும் வகையில் மாற்று ஏற்பாடு செய்ய ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தண்ணீர் தொட்டி மற்றும் சுய உதவி குழு கட்டடத்தில் அதிகளவு செடி, கொடிகள் முளைத்து காணப்படுகிறது. இதை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.