/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 02, 2024 12:16 AM
குடிமங்கலம்:தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், நிலுவை சம்பளம் வழங்கக்கோரி, மா.கம்யூ., கட்சியினர் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மா.கம்யூ., கட்சியின் ஒன்றியச்செயலாளர் சசிகலா தலைமையில், குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில், நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தை மா.கம்யூ., கட்சியினர் துவக்கினர். அவர்களிடம், ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அதிகாரிகள் தரப்பில், நவ., மாதத்துக்கான, 2 வார சம்பளம் போடப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள சம்பளம் இந்த மாதம் இறுதிக்குள் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, கட்சியினர் திரும்பிச்சென்றனர்.


