/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.டெக்., மாணவர்களுக்கு தொழில்சார் பயிலரங்கு பி.டெக்., மாணவர்களுக்கு தொழில்சார் பயிலரங்கு
பி.டெக்., மாணவர்களுக்கு தொழில்சார் பயிலரங்கு
பி.டெக்., மாணவர்களுக்கு தொழில்சார் பயிலரங்கு
பி.டெக்., மாணவர்களுக்கு தொழில்சார் பயிலரங்கு
ADDED : மார் 25, 2025 11:40 PM
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய திறன் மேம்பாடு மற்றும் செம்மை பயிலகம் சார்பில், பர்ஸ்ட் ஜாப் ஹியூமன் கேபிடல் நிறுவனத்துடன் இணைந்து, பயிலரங்கு நடத்தப்பட்டது.
எதிர்கால ஆயத்தப் பணியாளர்களை உருவாக்குதல் என்ற தலைப்பில், பி.டெக்., உணவுத் தொழில்நுட்பத் துறை இறுதியாண்டு மாணவர்களுக்கான, இந்த தொழில்சார் கல்விப் பயிலரங்கை, உணவு பதன் செய் பொறியியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
வேளாண் பொறியியல் டீன் ரவிராஜ், கல்வித் துறையை தொழில்துறையுடன் இணைப்பதன் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.
ஸ்கில் இந்தியா நிறுவன சி.இ.ஓ., முரளி காசிநாத், தொழில் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
எஸ்.பி., ரீட்டெயில் வென்சர்ஸ் நிறுவன பொது மேலாளர் சூர்ய நாராயணன், ஹண்டர் டக்ளஸ் மனிதவளத்துறை தலைவர் நாகராஜன் ஆகியோர், பல்வேறு துறை சார்ந்து மாணவர்களுக்கு விளக்கினர். மாணவர்கள், தங்களின் சந்தேகங்களைக் கேட்டு தெளிவடைந்தனர்.
உணவு பதன் செய் பொறியியல் துறை வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் பர்வீன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.